வாணியம்பாடியில் தமிழ்நாடு விஸ்வகர்மா மாகஜன சங்கம், பொன் மற்றும் வெள்ளி நகை தொழிலாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கினர்
" alt="" aria-hidden="true" />
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அம்பூர்பேட்டையில் தமிழ்நாடு விஸ்வகர்மா மாகஜன சங்கம், பொன் மற்றும் வெள்ளி நகை தொழிலாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விஸ்வகர்மா மாகஜன சங்கத்தின் மாநில துனை பொதுச் செயலாளாளர் வி.ராஜ்குமார் ஆச்சாரி தலைமை வகித்தார். விஸ்வகர்மா பொன் மற்றும் வெள்ளி நகை தொழிலாளர்கள் சங்கத்தின் நகர தலைவர் ஆர்.பி செல்வம் ஆச்சாரி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சிவபிரகாசம் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் 11 பேருக்கும், சுமார் 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1500 மதிப்புள்ள உணவு பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வருவாய்த்துறையினர், சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்