ஆணின் அவசர சிகிச்சைக்கு ரத்தம் தேவை மாவட்டத்தை கடந்து ரத்த தானம் செய்த மை தருமபுரி குழு நண்பர்கள்
" alt="" aria-hidden="true" />
தர்மபுரியில் மை தர்மபுரி குழு சார்பாக பல்வேறு பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆதரவற்றோர் என பல்வேறு தரப்பினருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர் அது மட்டுமின்றி மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு உடனடியாக ரத்தம் தேவை என்றால் மை தர்மபுரி குழு சார்பாக உடனடியாக ஏற்பாடு செய்து ரத்த தானம் செய்து வருகின்றனர். அதேபோல் மேட்டூர் அரசு மருத்துவமனையில் ஆண் நபர் ஒருவருக்கு அவசர சிகிச்சைக்கு *A POSITIVE* ரத்தம் தேவைப் பட்டதால் மை தர்மபுரி சார்பாக மேட்டூர் நண்பர்களுடன் தொடர்பு கொண்டு தன்னார்வலர் திரு ஆனந்த் அவர்கள் ரத்த தானம் செய்தார் . மாவட்டத்தை கடந்து ரத்த தானம் செய்த திரு ஆனந்த் அவர்களையும் ஏற்பாடு செய்த மை தருமபுரி குழுவினரையும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்